
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் எரிபொருளுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.
நேற்றுமுதல் எரிபொருளை சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்தல் மற்றும் பதுக்கி வைத்திருப்போரை கண்டறிவதற்காக விசேட நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகஇ காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மட்டக்களப்பில் 850 லீட்டர் பெற்றோலை கொண்டு செல்ல முற்பட்ட சந்தேகநபர்கள் இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளளதாக தெரிவிக்கப்படுகிறது.

