
நாட்டில் அன்றாடம் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடுகள் மற்றும் விலை அதிகரிப்புக்களால் மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் அரசாங்கத்திற்று எதிரான மக்கள் போராட்டங்களும் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.
அதேவேளை புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டபோதும் நாட்டில் தற்போது வரை எவ்விதமான மாற்றங்களும் இடம்பெறவில்லை.
இவ்வாறான நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அமைச்சரவைக்கான நியமனங்கள் சில தினங்களாக இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் அரசாங்கத்தை பகிரங்கமாக விமர்சித்த தரப்புக்களும், எதிரணியிலிருந்து அரச பக்கம் தாவிய உறுப்பினர்களுடன், சிறீலங்கா சுதந்திர கட்சி உள்ளிட்ட பங்காளிக் கட்சிகளை உள்ளடக்கியதாக அமைச்சரவை நியமனங்கள் வழங்கப்பட்டு வருகின்றது.
இவ்வாறான நிலையில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் இரு பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சரவையில் இணைக்கப்பட்டதையடுத்து சஜித் தரப்பிடையே கருத்து மோதல்கள் இடம்பெற்றன.
இவ்வாறான நிலையில் புதிய அரசாங்கத்தில் இணைவதற்கான அழைப்பு கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க அதனை பயன்படுத்தி நாட்டுக்காக பணியாற்றுவேன் என அறிவித்துள்ளார்.
இதேவேளை சில தினங்களில் மேலும் பல எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அரச தரப்புடன் இணையலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

