கொழும்பு,மே 22
பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் நன்மைக்கருதி தேவையான காலத்தில் மின்விநியோகத்தை முன்னெடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், திங்கட்கிழமை A முதல் W வரையிலான வலையங்களில் நண்பகல் முதல் மாலை 06.30 வரையில் இரண்டு மணித்தியாலங்களும் 10 நிமிடங்களும் மின்விநியோகத்தடை அமல்ப்படுத்தப்படவுள்ளது.
அத்துடன், cc வலையங்களில் காலை 6 மணிமுதல் 9 மணிவரையிலான காலப்பகுதிலும், M, N, O, X, Y, Z ஆகிய வலையங்களில் காலை 5 மணிமுதல் 8 மணிவரையிலான காலப்பகுதியிலும் மின்விநியோகத்தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளது.



