நாமலைப் போல முட்டாள்தனமான சிந்தனையுடையவர் இதற்கு முன் அமைச்சரவையில் இருந்ததில்லை! நலிந்த ஜெயதிஸ்ஸ

அமைச்சரவையில் உள்ள மிகப்பெரிய நகைச்சுவையாளர் முட்டாள்தனமான சிந்தனை உடையவர் யார் என்பதை மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜெயதிஸ்ச ஊடகங்களின் முன்னிலையில் எடுத்துக்காட்டியுள்ளார்.

யுகதனவி மின்நிலையத்தை அமெரிக்காவிடம் வழங்குவதற்கான ஒப்பந்தம் செப்டம்பர் 17 ஆம் திகதி நள்ளிரவு 12.07 மணிக்கு, தாங்கள் பணியில் இருந்தபோது கையெழுத்திடப்பட்டது என்று அமைச்சர் நாமல் ராஜபக்ச கூறியது நகைச்சுவையாகவும் முட்டாள்தனமாகவும் உள்ளது என அவர் தெரிவித்தார்.

இதுபோன்ற நகைச்சுவையாளர்கள் இதற்கு முன்பு அமைச்சரவையில் இருந்ததில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply