தெலுங்கு சினிமாவில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் விஜய் தேவரகொண்டா. இந்த படத்தை தொடர்ந்து தெலுங்கில் அடுத்தடுத்து கீதா கோவிந்தன் டியர் காம்ரேட் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.
தொடர்ந்து பல்வேறு வெற்றிப் படங்களைக் கொடுத்து வருகிறார். தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழ் மொழியில் நோட்டா என்ற படத்தில் நடித்து அந்த படத்தின் மூலமாகவும் வெற்றி கண்டார்.
தயாரிப்பாளராகும் சில படங்களை தயாரிக்கத் தொடங்கிய இவர் தனக்கென சொந்தமாக ஒரு திரையரங்கையும் திறந்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது விஜய் தேவரகொண்டா வித்தியாசமான தோற்றத்தில் அடையாளம் தெரியாமல் மாறிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.