மன்னார் பிரதேச சபை ஆட்சியைக் கைப்பற்றியது ஸ்ரீலங்கா முஸ்­லிம் காங்­கி­ரஸ்!

மன்னார் பிரதேச சபை ஆட்சியைக் கைப்பற்றியது ஸ்ரீ லங்கா முஸ்­லிம் காங்­கி­ரஸ் ஸ்ரீ லங்கா முஸ்­லிம் காங்­கி­ரஸ் கட்­சி­யைச் சேர்ந்த எருக்­க­லம்­பிட்டி உறுப்­பி­னர் எம்.ஐ.எம். இஸ­தீன் ஒரு வாக்கு வித்­தி­யா­சத்­தால் மன்­னார் பிர­தேச சபை தவி­சா­ள­ராகத் தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளார். எனி­னும், குறித்த தெரிவு, வர்த்­த­மா­னி­யில் வெளி­யி­டு­வ­தைத் தடுத்­து­நி­றுத்­து­மாறு மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்று வடக்கு மாகாண உள்­ளூ­ராட்சி ஆணை­யா­ள­ருக்கு உத்­த­ரவு பிறப்­பித்­துள்­ளது.

மன்­னார் பிர­தேச சபை­யின் தவி­சா­ளர் சாகுல் கமீது முகம்­மது முஜா­ஹிர், மன்­னார் பிர­தேச சபை­யின் தவி­சா­ளர் என்ற வகை­யில் அந்­தப்­ப­த­வி­யில் பணி­கள் மற்­றும் கட­மை­களை நிறை­வேற்­றும்­போது குற்­றங்­கள் புரிந்­துள்­ளார் என்ற அடிப்­ப­டை­யில் கடந்த 14ஆம் திகதி தொடக்­கம் மன்­னார் பிர­தேச சபைத் தவி­சா­ளர் பத­வி­யை­யும் உறுப்­பி­னர் பத­வி­யை­யும் வடக்கு ஆளு­நர் நீக்­கி­யி­ருந்­தார்.
அதனை ஆட்­சே­பித்து முன்­னாள் தவி­சா­ளர் எஸ்.எச்.எம்.முஜா­ஹிர், கொழும்பு மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றில் ரிட் மனு ஒன்றை நேற்­று­முன்­தி­னம் தாக்­கல் செய்­தி­ருந்­தார். இந்­த­நி­லை­யில், மன்­னார் பிர­தேச சபை­யின் புதிய தவி­சா­ளர் தெரிவு நேற்று நடை­பெற்­றது.

எனினும் மன்­னார் பிர­தேச சபைக்­கான புதிய தவி­சா­ளரை நிய­மித்து, வர்த்­த­மானி வெளி­யி­டு­வதை நிறுத்­து­மாறு வடக்கு மாகாண உள்­ளூ­ராட்சி ஆணை­யா­ள­ருக்கு மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்று நேற்று உத்­த­ரவு பிறப்­பித்­துள்­ளது.
குறித்த நீதி­மன்­றத் தீர்ப்பு வெளி­யா­வ­தற்கு முன்­னர், நேற்­று­முற்­ப­கல் வடக்கு மாகாண உள்­ளூ­ராட்சி ஆணை­யா­ளர் பற்­றிக் டிரஞ்­சன் தலை­மை­யில் மன்­னார் பிர­தேச சபை மண்­ட­பத்­தில் தெரிவு நடை­பெற்­றது. சபை­யின் 21 உறுப்­பி­னர்­க­ளில் ஒரு­வர் சபை­யி­லி­ருந்து நீக்­கப்­பட்ட நிலை­யில் 20 உறுப்­பி­னர்­கள் மத்­தி­யில் தவி­சா­ள­ருக்­கான தேர்­தல் நடை­பெற்­றது.

மூவர் போட்டி
இந்­தத் தேர்­த­லில் ஸ்ரீ லங்கா முஸ்­லிம் காங்­கி­ரஸ் கட்­சியை சார்ந்த எருக்­க­லம்­பிட்டி உறுப்­பி­னர் எம்.ஐ.எம். இஸ­தீ­னும், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பின் பேசாலை உறுப்­பி­னர் ஜே.ஈ.கொன்­சன் குலா­ஸூம், ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன கட்­சி­யைச் சார்ந்த என்.செப­மாலை பீரிஸும் தவி­சா­ள­ ருக்­கான போட்­டி­யில் இறங்­கி­யி­ருந்­த­னர். இதில் முதல் சுற்­றில் நடை­பெற்ற திறந்த போட்­டி­யில்
ஸ்ரீலங்கா முஸ்­லிம் காங்­கி­ரஸ் கட்­சி­யைச் சார்ந்த எருக்­க­லம்­பிட்டி உறுப்­பி­னர் எம்.ஐ.எம். இஸ­தீன் 09 வாக்­கு­க­ளை­யும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் பேசாலை உறுப்­பி­னர் ஜே.ஈ.கொன்­சன் குலாஸ் 08 வாக்­கு­க­ளை­யும், ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன கட்­சி­யைச் சார்ந்த என்.செப­மாலை பீரிஸ் 03 வாக்­கு­க­ளை­யும் பெற்­றி­ருந்­த­னர்.

இரண்­டாம் சுற்று
இதைத் தொடர்ந்து இரண்­டாம் சுற்று வாக்­கெ­டுப்பு நடை­பெற்­றது. இந்த வாக்­கெ­டுப்­பில் ஸ்ரீலங்கா முஸ்­லிம் காங்­கி­ரஸ் கட்­சி­யைச் சார்ந்த எருக்­க­லம்­பிட்டி உறுப்­பி­னர் எம்.ஐ.எம். இஸ­தீ­னுக்­கும், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் பேசாலை உறுப்­பி­னர் ஜே.ஈ.கொன்­சன் குலா­ஸூக்­கும் இடையே நடை­பெற்­றது.

இதில் அகில இலங்கை மக்­கள் காங்­கி­ரஸ் கட்­சி­யைச் சார்ந்த 06 உறுப்­பி­னர்­க­ளும், ஸ்ரீ லங்கா முஸ்­லிம் காங்­கி­ரஸ் கட்­சியை சார்ந்த ஓர் உறுப்­பி­ன­ரும், தமி­ழர் விடு­த­லைக் கூட்­டணி சார்­பில் ஓர் உறுப்­பி­ன­ரும் ஈ.பி.டி.பி. கட்சி சார்­பில் ஓர் உறுப்­பி­ன­ரும் வாக்­க­ளித்­த­தில் ஸ்ரீ லங்கா முஸ்­லிம் காங்­கி­ரஸ் கட்சி சார்­பில் போட்­டி­யிட்ட எருக்­க­லம்­பிட்டி உறுப்­பி­னர் எம்.ஐ.எம். இஸ­தீ­னுக்கு 09 வாக்­கு­கள் கிடைத்­தன.
தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் சார்­பில் 07 உறுப்­பி­னர்­க­ளும், ஸ்ரீ லங்கா முஸ்­லிம் காங்­கி­ரஸ் கட்­சி­யைச் சேர்ந்த ஓர் உறுப்­பி­ன­ரும் வாக்­க­ளித்­த­தில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு சார்­பில் போட்­டி­யிட்ட பேசாலை உறுப்­பி­னர் ஜே.ஈ.கொன்­சன் குலா­ஸூக்கு 08 வாக்­கு­க­ளும் கிடைத்­தன.

ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன கட்­சி­யைச் சார்ந்த ஓர் உறுப்­பி­ன­ரும். ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யைச் சார்ந்த 02 உறுப்­பி­னர்­க­ளும் இரண்­டாம் சுற்று வாக்­க­ளிப்­பில் நடு­நிலை வகித்­த­னர். இதைத் தொடர்ந்து ஸ்ரீ லங்கா முஸ்­லிம் காங்­கி­ரஸ் கட்சி சார்­பில் போட்­டி­யிட்ட எருக்­க­லம்­பிட்டி உறுப்­பி­னர் எம்.ஐ.எம். இஸ­தீன் 09 வாக்­கு­கள் பெற்று ஒரு மேல­திக வாக்­கால் மன்­னார் பிர­தேச சபைத் தவி­சா­ள­ரா­கத் தெரிவு செய்­யப்­பட்­டார்.

ஊட­கங்­க­ளுக்கு அனு­மதி மறுப்பு
இந்­தத் தேர்­த­லின்­போது மன்­னார் பிர­தேச சபை உறுப்­பி­னர்­கள் தவிர ஊட­க­வி­ய­லா­ளர்­கள் மற்­றும் அங்கு வந்­தி­ருந்த வன்னி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சாள்ஸ் நிர்­ம­ல­நா­தன் உட்­பட அர­சி­யல்­வா­தி­கள் எவ­ரும் தேர்­தல் முடி­யும்­வரை வளா­கத்­துக்­குள் அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை.அத்­து­டன் மன்­னார் பிர­தேச சபையைச் சுற்றி பலத்த பொலிஸ் பாது­காப்பு போடப்­பட்டு இருந்­தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *