
கொழும்பு,மே 23
க.பொ.த சாதாரண தர பரீட்சை நிலையங்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, ஒவ்வொரு பரீட்சை மையத்திலும் ஒரு சார்ஜென்ட் மற்றும் இரண்டு கான்ஸ்டபிள்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
அத்துடன், பரீட்சார்த்திகளுக்கும் வினாத்தாள்கள் மற்றும் விடைத்தாள்களுக்கும் நடமாடும் பொலிஸ் ரோந்து பாதுகாப்பு வழங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, க.பொ.த.சாதாரண தர பரீட்சையின் போது வீதி மறியலில் ஈடுபட வேண்டாம் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

