மூன்றாம் தரப்பினரிடமிருந்து எரிபொருளை கொள்வனவு செய்ய வேண்டாம்! – எரிசக்தி அமைச்சர் கோரிக்கை

மூன்றாம் தரப்பினரிடம் இருந்து எரிபொருள் கொள்வனவு செய்ய வேண்டாம் என வலுசக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளார்.

எரிபொருள் சேகரிப்பில் ஈடுபட்டுள்ள நபர்கள், பெட்ரோலியப் பொருட்களை மற்ற திரவங்களுடன் கலந்து அதிக விலைக்கு விற்பனை செய்வது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுபோன்ற வணிகங்களை ஊக்குவிக்க வேண்டாம் என்றும், அவற்றைப் பற்றி புகாரளிக்கவும் எனவும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *