
இலங்கையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க கதிர்காம கந்தனின் வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பாதயாத்திரையாக பக்தர்கள் கதிர்காமம் நோக்கி செல்லுவது வழமை.
இந்நிலையில் கடந்த இரு வருடங்களாக நாட்டில் ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாக பாதயாத்திரை செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இவ்வாறான நிலையில் இம்முறை யாழ் வடமராட்சி செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து கதிர்காம பாதயாத்திரை 3 ஆம் திகதியிலிருந்து ஆரம்பமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இப் பாதயாத்திரையில் பாடசாலை மாணவர்கள் தவிர்ந்த யாவரும் பங்குகொள்ள முடியும்
எனவும் மேலும் புகைத்தல்மற்றும் மது பானம் உபயோகித்தல் கலாசாரத்திற்கு புறம்பான ஆடை அணிதல் என்பன முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை பாதயாத்திரையில் பங்கெடுப்பவர்கள் கொரோனா தடுப்பூசி அட்டையை தம்வசம் வைத்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

