உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்டுள்ள போர் நடவடிக்கை இரண்டு மாதங்களை கடந்தும் தொடர்கின்றது.
இந்நிலையில் உக்ரைனின் மயுரிபோல் நகரை கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரஷ்யா கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளது.
இதையடுத்து ரஷ்யாவிற்கு உலக நாடுகள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்தேய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடையை விதித்துள்ளன .
இதற்கிடையே ரஷ்யாவின் செயற்பாடுகளை அந் நாட்டைச் சேர்ந்த முன்னாள் உலக செஸ் சம்பியன் கேரி கேஸ்பரோவ் . முன்னாள் எண்ணெய் அதிபர் மிகெயில் கோதோர்வ்ஸ்கி ஆகியோர் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர் .
இதையடுத்து நீதித்துறை அமைச்சகம் . அவர்களை ‘ வெளிநாட்டு உளவாளிகள் ‘ என்ற பட்டியலில் இணைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

