கப்ராலுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடை நீடிப்பு !

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடை நீடிக்கப்பட்டுள்ளது.

இன்று வரை தடை விதிக்கப்பட்ட தடையை ஆடி 25 வரை நீடித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (திங்கட்கிழமை) உத்தரவிட்டது.

அமைச்சரவையின் அல்லது நிதிச் சபையின் அனுமதியின்றி இமாத் ஷா சுபைரிக்கு, 6.5 மில்லியன் டொலர்களை செலுத்தியதன் மூலம், கப்ரால் குற்றத்தை புரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 2022 ஜனவரி 18ஆம் திகதி செலுத்த வேண்டிய முறிப் பத்திரங்கள் மூலம் இலங்கை அரசாங்கத்திற்கு 500 மில்லியன் டொலர் நஷ்டத்தை ஏற்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *