
நாட்டில் கடந்த சில மாதங்களாக எரிபொருள் எரிவாயுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.
இதேவேளை கடந்த சில மாதங்களாக அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் தினந்தோறும் உயர்வடைந்து வருகின்றன.
இவ்வாறான நிலையில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தற்போது மரக்கறி வகைகளின் விலைகளும் உச்சமடைந்து வருகின்றது.
இதேவேளை யாழ்ப்பாணத்தை பொறுத்தவரையில் தற்போது தக்காளியின் விலை 1000ஐ கடந்து விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒருகிலோ தக்காளியின் விலை 700-800 வரை யாழ் திருநெல்வேலி சந்தையில் விற்பனையாகியது.
இந்நிலையில் அதிகரித்துள்ள மரக்கறி விலைகள் காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

