நாடாளுமன்றத்தை உளவு பார்க்க சென்றதாக சந்தேகிக்கப்படும் நபரொருவரை மேல்மாகாண புலனாய்வு பிரிவின் அதிகாரியொருவர் கைது செய்துள்ளார்.
குறித்த நபர் மொரட்டுவை பகுதியைச் சேர்ந்தவர் என்பது விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் மொரட்டுவையிலிருந்து சைக்கிள் ஊடாக வருகைத்தந்து, நாடாளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் உள்ள உயர் பாதுகாப்பு வலயத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள வாவிக்குள் குதித்துள்ளார்.

இதனையடுத்து, குறித்த நபர் கைது செய்யப்பட்டதோடு, அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் பிரவேசித்தமைக்கான காரணத்தை அவர் தெளிவாகக் கூறவில்லை எனவும் உயர் அதிகாரி குறிப்பிட்டார்.
சந்தேக நபரின் நடத்தையை கண்காணிக்க அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த CCTV கெமராக்களை ஆராய்ந்து வருவதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் குறித்து தலங்கம பொலிஸ் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

