
கொழும்பு. மே 23
விவசாயம், வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சராக மஹிந்த அமரவீர சற்றுமுன்னர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜக்ஷ முன்னிலையில் ஜனாதிபதி மாளிகையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
அத்துடன், மேலும் சில அமைச்சர்கள் பதவியேற்கும் நிகழ்வு ஜனாதிபதி மாளிகையில் இடம்பெறுகின்றது.

