
புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றதை தொடர்ந்து புதிய அமைச்சரவை நியமனங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் அமைச்சரவைக்குள் ஆளுந்தரப்பு உறுப்பினர்களுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் இரு பாராளுமன்ற உறுப்பினர்களும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் மேற்கொண்டனர்.
அதேவேளை சற்றுமுன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் மேலும் சில புதிய அமைச்சரவை அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்துகொள்ளும் நிகழ்வு நடைபெற்றது.
இன்று புதிதாக 10 அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம் செய்துள்ளனர்.
அதேவேளை யாழ் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா மீண்டும் கடற்றொழில் அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துள்ளார்.

