கிளிநொச்சியில் மறுமலர்ச்சி சனசமூக நிலைய கட்டடம் திறந்துவைப்பு!(படங்கள் இணைப்பு)

மறுமலர்ச்சி சனசமூக நிலைய கட்டடம் இன்று திறந்துவைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று காலை 10.30 மணியளவில் இடம் பெற்றது.

கிளிநொச்சி திருநகர் பகுதியில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட குறித்த கட்டடம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரனால் திறந்து வைக்கப்பட்டது.

குறித்த கட்டடத்தில் நூலகம், உப அஞ்சல் அலுவலகம் ஆகியன இன்று முதல் இயங்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் மக்கள் பிரதிநிதிகள், அரச அலுவலர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *