செவ்வாய் (24) முதல் 95 ஒக்டேன் பெட்ரோலை பெற்றுக்கொள்ளலாம் – அரசாங்கம்

இன்று (23) முதல் நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு 95 ஒக்டேன் பெட்ரோல் வழங்கப்படும் என எரிசக்தி அமைச்சர் அறிவித்துள்ளார்.

இரண்டு கப்பல்களில் இருந்து எரிபொருள் தரை இறக்கப்பட்ட நிலையில், அடுத்த 6 வாரங்களுக்கு போதுமான 95 ஒக்டேன் பெட்ரோல் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

ஆகவே 95 ஒக்டேன் பெட்ரோலைப் பயன்படுத்துபவர்கள் 92 ஒக்டேன் பெட்ரோல் வரிசையில் நிற்க வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

எனேவ நாளை செவ்வாய்கிழமை (24) முதல் 95 ஒக்டேன் பெட்ரோலை பெற்றுக்கொள்ளுமாறும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *