ஹட்டனில் பரீட்சை எழுதும் மாணவர்களின் வருகையில் வீழ்ச்சி!

நாடளாவிய ரீதியில் 2021ம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகியது.

இந்நிலையில் ஹட்டன் கல்வி வலயத்தில் இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் வருகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹட்டன் வலயத்தில் மொத்தமாக 3,627 பாடசாலை பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றும் போதிலும் அதில் சுமார் 247 மாணவர்கள் இன்றைய தினம் பரீட்சைக்கு சமூகமளிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மொத்தமாக 290 தனிப்பட்ட பரீட்சார்த்திகள் பரீட்சையில் தோற்றும் நிலையில் இன்றைய தினம் 95 பரீட்சார்த்திகள் பரீட்சையில் தோற்றவில்லை என பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த மாணவர்கள் என்ன காரணத்திற்காக பரீட்சைக்கு தோற்றவில்லை என இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *