நாட்டில் கடந்த 09ம் திகதி அரசாங்கத்திற்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 1,591 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்களில் 719 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதேவேளைஇ மோதல் சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

