நாட்டின் பிள்ளைகளுக்காகவே அமைச்சுப் பதவியை பொறுப்பேற்றேன் – ஹரின் பெர்னாண்டோ

நாட்டின் பிள்ளைகளுக்காகவும் நாட்டை ஸ்திரப்படுத்துவதற்காகவும் நாட்டில் ஏற்பட்ட நெருக்கடியானவேளையில் தான் அமைச்சுப் பதவியை பொறுப்பேற்றதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இன்று (திங்கட்கிழமை) காலை அமைச்சராக கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 21வது திருத்தம் இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும், இல்லை என்றால் அரசாங்கத்தில் இருந்து விலகுவேன் என்றும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “சுற்றுலாத்துறைக்கு புத்துயிர் அளிக்கும் வேலைத்திட்டத்தில், இலங்கையில் உள்ள அனைத்து அறிஞர்களையும் சந்தித்து குறுகிய காலத்தில் 10,000 முதல் 15,000 சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வரவழைக்கும் வேலைத்திட்டத்தை நாங்கள் முன்னெடுத்துள்ளோம்.

அனைவருக்கும் ஒரு நம்பிக்கையான வேண்டுகோள் விடுக்கிறேன். இது கிரீடம் அல்ல. முள் கிரீடம். இது ஒரு தற்கொலைப் பணி. எல்லா அரசியல் கட்சிகளையும், கிராமங்களையும் மறந்து, திட்டுகளுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும் செவிசாய்த்து, நாட்டின் ஸ்திரத்தன்மைக்காக நாம் செய்த காரியம். நாம் ஒரு நாடாக ஒன்றுபட வேண்டும் என்று நான் நம்புகிறேன்” என மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *