ஜகத் அல்விஸ் தற்போது குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் வாக்குமூலம்!

அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் பல்வேறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் கடந்த 09ம் திகதி அரச ஆதரவுக் குழு ஒன்றினால் ஆர்ப்பாட்டகாரர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதோடு ஆர்ப்பாட்ட கூடாரங்களும் தீக்கிரையாக்கி அழிக்கப்பட்டன.

இவ்வாறான நிலையில் ஆர்ப்பாட்ட காரர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜகத் அல்விஸ் தற்போது குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் வாக்குமூலம் வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

காலி முகத்திடல் போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்த வருபவர்களுக்கு கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை மேற்கொள்ள வேண்டாம் என பொலிஸ் மா அதிபர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பணிப்புரை விடுத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் பத்திரன நாடாளுமன்றில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *