எரிபொருள் விநியோகத்துக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்குக!

எரிபொருளைக் கொண்டு செல்லும் போது தமக்குப் பாதுகாப்பு வழங்குமாறு இலங்கை பெற்றோலிய தனியார் பவுஸர் உரிமையாளர்கள் சங்கத்தினர், பொலிஸ்மா அதிபரிடம் நேற்றுக் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

கடந்த சில நாள்களாக குறிப்பிட்ட சில குழுக்கள் செய்த பல்வேறு இடையூறுகளை மேற்கோள்காட்டி, அந்தச்சங்கத்தின் இணைச் செயலாளர் டி.வி.சாந்த சில்வா எரிபொருள் போக்குவரத்தின் போது பாதுகாப்பு வழங்குமாறு கோரியுள்ளார்.

பாதுகாப்பு வழங்கப்படாவிட்டால் கடமைக்கு சமுகமளிக்க முடியாது எனவும் அவர் பொலிஸ் மா அதிபரிடம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *