
இலங்கையைச் சேர்ந்த கெசென்ட்ரா பெர்னான்டோ அவுஸ்திரேலிய பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார்.
தொழிற்கட்சியை சேர்ந்த கெசென்ட்ரா பெர்னான்டோ , அவுஸ்திரேலியாவின் ஹோல்ட் தேர்தல் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார்.
கெசென்ட்ரா பெர்னான்டோ , 1999 ஆம் ஆண்டு தனது 11 ஆவது வயதில் குடும்பத்தினருடன் அவுஸ்திரேலியாவில் குடியேறினார்.
அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்திற்கு தெரிவான முதலாவது இலங்கை பெண்ணாகவும் அவர் பதிவாகியுள்ளார்.
மற்றுமொரு இலங்கையரான ரஞ்ச் பெரேரா, ஹோல்ட் தொகுதியில் லிபரல் கட்சி சார்பில் கெசென்ட்ரா பெர்னான்டோ -ஐ எதிர்த்து போட்டியிட்டார்.
கெசென்ட்ரா பெர்னான்டோ , 57.5 வீத வாக்குகளைப் பெற்ற அதேவேளை ரஞ்ச் பெரேரா 42.5 வீத வாக்குகளையே பெற்றுக் கொண்டார்.

