வாகன இறக்குமதி – புதிய அமைச்சரின் முன்மொழிவு!

இலங்கைக்கு பணம் அனுப்புபவர்களுக்கு வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பான யோசனையை சமர்ப்பிக்க அமைச்சர் மனுஷ நாணயக்கார தீர்மானித்துள்ளார்.

ஆரம்பத்தில் வருடமொன்றுக்கு 100,000 டொலர்களை அனுப்பியவர்களுக்கு வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு முன்மொழிவதாக அமைச்சர் தெரிவித்தார்.

இதற்கான பிரேரணையை இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார மேலும் தெரிவித்தார்.

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களை பணம் அனுப்புவதற்கு ஊக்குவிப்பதற்காக மேலும் பல வழிகளை ஆராய்ந்து வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *