சட்டவிரோதமாக பெற்றோல் கொண்டு சென்ற இருவர் கைது!

மட்டக்களப்பு – வெல்லாவெளிப் பகுதியில் கப் வாகனமொன்றில் சட்டவிரோதமாக ஒரு தொகை பெற்றோலைக் கொண்டு சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெல்லாவெளி நகரில் அமைக்கப்பட்டுள்ள வீதித்தடை ஊடாக பயணிக்க முற்பட்ட கப் வாகனமொன்றை சோதனைக்குட்படுத்திய போது அதில் 850 லீற்றர் பெற்றோலை சட்டவிரோதமாகக் கொண்டு செல்ல முயற்சித்தமை தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து மகா ஓயா பகுதியைச் சேர்ந்த 41 மற்றும் 47 வயதான இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை நீதவான் முன்னிலையில் முற்படுத்திய போது அவர்களை நாளை மறுதினம் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *