
மோட்டார் சைக்கிள்- பஸ் விபத்தில் இருவர் படுகாயமடைந்தனர் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த விபத்துச் சம்பவம் இன்று சாவகச்சேரி- நுணாவில் பகுதியில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணத்திலுருந்து கொடிகாம் நோக்கிச் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை பின்னால் சென்ற தனியார் பஸ் மோதியதிலே இந்த விபத்து இடம்பெற்றது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் யாழ்.போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அத்துடன் பஸ் நடத்துனருக்கும் சிறுகாயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

