
95 ரக ஒக்ரோன் பெற்றோல் இன்று முதல் நாடளாவிய ரீதியில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விடுவிக்கப்படவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இரண்டு கப்பல்களில் இருந்து 95 ரக ஒக்ரோன் பெற்றோல் தரையிறக்கப்பட்டுள்ளதாகவும் அவை எதிர்வரும் 6 வாரங்களுக்கு போதுமானதாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே நாளை முதல் 95 ரக ஒக்ரோன் பெற்றோலைப் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

