வவுனியா பொது நூலகத்தில் குடிநீர் இன்றி மாணவர்கள் உட்பட நிலையத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள் வரை பல்வேறு அவல நிலைமைகள் ஏற்படுவதாகவும் இதனை உடன் சீரமைத்துத்தருமாறும் கோருகின்றனர்.
இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,
வவுனியா பொது நூலகத்தில் குடிநீர் பெற்றுக்கொள்வதற்கு கொண்டுவரப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத் தொகுதி ஒன்று பயன்பாடு இன்றி கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக பொருத்தப்படவில்லை.
காட்சிப் பொருளாக அங்கு வைக்கப்பட்டுள்ளது. நூலகத்திற்கு வரும் வாடிக்கையாளர் உட்பட தினசரி பத்திரிகை வாசிப்பாளர்கள் வரை தற்போதைய வெப்ப நிலையினால் குடிநீர் இன்றி பல்வேறு அவல நிலைக்குட்படுவதாகவும். அத்துடன் ஆண் பெண் மலசலகூடத்திலிருந்து துர்நாற்றம் வீசுகின்றது பழுதடைந்த நிலையில் காணப்படுகின்றது.
நூலகத்தில் பொருத்தப்பட்ட சி.சி.ரி கமராக்களில் அனேகமானவை செயலிழந்து காணப்படுகின்றது.
இவ்வாறு பல கட்டமைப்புக்கள் செயலிழந்தும் அதிகாரிகளின் கவனம் இன்றியும் காணப்படுவதை அவதானிக்க முடிந்துள்ளது.
நகரின் பொக்கிஷமாகப் போற்றி பேணவேண்டிய அறிவுக்களஞ்சியசாலையில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றன.
இக்குறைபாடுகள் அனைத்தும் தற்போது நகரசபையில் காணப்படும் ஊழியர்களை கொண்டு சரி செய்துகொள்ள முடியும்.
எனினும் அதிகாரிகளின் அசண்டையீனம் காரணமாக பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றதாகவும் இதனை உடனடியாக சீரமைத்து மக்களின் அவசியத் தேவைகளை பூர்த்தி செய்து தருமாறு மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



