கொழும்பு,மே 23
திங்கட்கிழமை ஜனாதிபதியால் புதிதாக சிலருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டது. இதில் வெகுஜன ஊடக மற்றும் தகவல் அமைச்சில் பதவியேற்ற அமைச்சர் பந்துல குணவர்தன தனது கடமைகளைப் பெறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன புதிய அமைச்சரவை பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், புதிய அமைச்சரவையின் இணைப் பேச்சாளர்களாக மஹிந்த அமரவீர, மனுஷ நாணயக்கார மற்றும் கஞ்சன விஜேசேகர ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
