யாழ் மாவட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அறிவிப்பு

01.10.2021 அன்று தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்பட்டதும் பொதுமக்களுக்கு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்திற்கு வருகை தர வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கும் சாரதி அனுமதிப் பத்திரங்களை புதுப்பித்தல், சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கு விண்ணப்பித்தல் – இணைப்பிரதி பெறல், சாரதி அனுமதிப்பத்திர நீடிப்பு என்பன தொடர்பாகவும் சாரதி அனுமதிப்பத்திர எழுத்துப் பரீட்சை, பிரயோகப்பரீட்சை என்பன தொடர்பாகவும் சேவை பெறுநர்கள் திணைக்களத்தை அணுகுவதற்கு வாய்ப்புள்ளது.

இதனால் ஏற்படும் நெருக்கடிகளைத் தவிர்த்துக் கொள்ளும் வகையிலும் நாட்டில் நிலவும் Covid-19 நிலமைகளைக்கருத்தில் கொண்டும் 

01.04.2021 முதல் 30.09.2021 வரையான  காலத்தில் காலாவதியாகும் அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களும் காலாவதியாகும் திகதியிலிருந்து மேலும் 12 மாதங்களுக்கு 29.09.2021ம் திகதிய 17/2247ம் இலக்க அதிவிசேட வர்த்தமானி மூலம் நீடிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் குறித்த வர்த்தமானி மூலம் 2021.10.01 இலிருந்து 2022.03.31 வரையானகாலப்பகுதிக்குள் காலாவதியாகின்ற சாரதி அனுமதிப்பத்திரங்கள் அனைத்தும் காலாவதியாகின்ற குறித்த திகதியிலிருந்து மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்கப்படுகிறது.

மேற்படி கால எல்லைக்குள் உள்ளடங்காதவர்களுக்கான சேவைகள் பற்றிய விபரம் மற்றும் புதிய விண்ணப்பங்கள் மற்றும் சாரதி அனுமதிப்பத்திர எழுத்துப் பரீட்சை, பிரயோகப் பரீட்சை என்பவற்றுக்கான திகதிகள் அரசின் புதிய சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமையவும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் வழிப்படுத்தலுக்கு அமையவும் அறியத்தரப்படும்.

மேலதிக விபரங்கள் தேவைப்படுவோர் – 021 222 3789  அல்லது   – 021 222 7552  என்ற இலக்கத்துடன்  தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *