புதிய அமைச்சரவைப் பேச்சாளராக பந்துல!

புதிய அமைச்சரவைப் பேச்சாளராக வெகுஜன ஊடகம், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், மூன்று இணை அமைச்சரவைப் பேச்சாளர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார்.

இதன்படி, அமைச்சர் மஹிந்த அமரவீர, மனுஷ நாணயக்கார மற்றும் காஞ்சன விஜேசேகர ஆகியோர் இணை அமைச்சரவைப் பேச்சாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *