தடைசெய்யப்பட்ட சிகரெட்டுக்களுடன் காத்தான்குடியில் ஒருவர் கைது!

<!–

தடைசெய்யப்பட்ட சிகரெட்டுக்களுடன் காத்தான்குடியில் ஒருவர் கைது! – Athavan News

காத்தான்குடியில் தடைசெய்யப்பட்ட சிகரெட்களை வியாபாரம் செய்துவந்த ஒருவரின் வீட்டை விசேட அதிரடிப்படையினர் முற்றுகையிட்டு மறைத்துவைக்கப்பட்டிருந்த 4 பண்டல் கொண்ட 1020 சிகரட்டுக்களை மீட்டதுடன் 65 வயதுடைய ஒருவரை  நேற்று (திங்கட்கிழமை) கைது செய்து ஒப்படைத்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

இராணுவ புலனாய்வு பிரிபின் இரகசிய தகவல் ஒன்றிற்கமைய களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படையினருடன் இராணுவ புலனாய்வு பிரிவினரும் இணைந்து சம்பவதினமான இன்று பிற்பகல் 3 மணிக்கு காத்தான்குடி 6ஆம் பிரிவிலுள்ள அல்அமீன் வீதியிலுள்ள வீடு ஒன்றை முற்றுகையிட்டு சோனையின் போது விற்பனைக்காக வைத்திருந்த தடை செய்யப்பட்ட 4 பண்டல் சிகரட்டுக்களை மீட்டதுடன் ஒருவரை கைது செய்தனர்.

இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவரையும் மீட்கப்பட்ட சிகரட்டுக்களான சான்று பொருட்களுடன் விசேட அதிரடிப்படையினர் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *