இந்தா வருது வருது பெற்றோல் – அமைச்சரை திட்டித் தீர்க்கும் யாழ் மக்கள்! (வீடியோ இணைப்பு)

நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலை அதிகரிப்பு ,மற்றும் தட்டுப்பாடு காரணமாக மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

இந்த விடயம் தொடர்பில் வாகன சாரதிகள் சிலர் சமூகம் மீடியாவுக்கு கருத்து தெரிவிக்கையில்.

அதிகாலையில் ஒவ்வொரு எரிபொருள் நிரப்பு நிலையமாக காத்திருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பெற்றோல் தருவார்களா இல்லையா என்பது தெரியாது.ஆனாலும் வரிசையில் நிற்கின்றோம்.வரிசை என்றால் சாதாரண வரிசை இல்லை இப்போது.மிகவும் நீண்ட வரிசையில் நிற்கவேண்டிய தேவை உள்ளது.
அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது இந்த நிலையில் ,ஒரு நாள் வேலையை நிறுத்தி இங்கே வரிசையில் வந்து நிற்க வேண்டும்.எப்படி குடும்பத்தை நடாத்துவது.

இது தவிர பெற்றோலிய அமைச்சர் பெற்றோல் கப்பல் வருது வருது என்று கூறுகின்றார்.கப்பலை இன்னமும் காணவில்லை.அவர் பொய் சொல்லக் கூடாது என்றனர்.

வீடியோ இணைப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *