ஜூனில் நாட்டுக்கு விடிவு காலம்; பிரபல ஜோதிடரின் கணிப்பால் அரசியல் அரங்கில் பரபரப்பு!

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இலங்கையின் அரசியல் எதிர்காலம் தொடர்பில் பிரபல ஜோதிடரின் கணிப்பால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகின்றது.

பிரபல ஜோதிடரின் கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் எதிர்வரும் ஜூன் மாதம் 20 ஆம் திகதிக்கு பின்னர் புதிய தலைவரொருவர் உதயமாகவுள்ளதாகவும் , அதன்பின்னர் நாட்டில் பல பாரிய எழுச்சிகள் ஏற்படும் எனவும் பிரபல ஜோதிடர் வி கல்யாணி ஹேரத் மேனிகே தெரிவித்துள்ளார்.

அதேவேளை இலங்கையின் ஜாதகம் கும்பம் என்றழைக்கப்படும். அத்துடன் சனி இப்போது இந்த கும்ப இராசியில் இருக்கின்றார் . பொதுவாக இராசியில் இருக்கும் சனி கொடியது . நாட்டை ஆளும் தலைவனுக்குக் கொடியது .

பொருளாதார நெருக்கடி காரணமாக தற்போதைய அரசாங்கம் பல்வேறு பிரச்சினை களை எதிர்நோக்கிவருகின்ற நிலையில் நெருக்கடிகள் மற்றும் எதிர்காலத்தில் அரசியல் களத்தில் பல மாற்றங்கள் ஏற்படவுள்ளது .

அதேவேளை ஜூலை 6 ஆம் திகதி முதல் சனி விலகி ஜனவரி 19 , 2023 முதல் பூஜ் ஜியத்திலிருந்து தொடங்கி . இந்த நாடு சரியான திசையில் நகரும் . அதற்கமைய , எதிர்வரும் ஜூன் மாதம் 20 ஆம் திகதிக்கு பின்னர் நாட்டிற்கு புதிய தலைவர் ஒருவர் உதயமாகவுள்ளதாகவும் , அதன் பின்னர் நாட்டில் பல பாரிய எழுச்சிகள் ஏற்ப டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார் .

இதேவேளை ஜனாதிபதி போட்டபாயவை பதவி விலகுமாறு கோரி நாடளாவிய ரீதியில் தன்னெழுச்சி போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில் சோதிடரின் இந்த கணிப்பு கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *