பதவியை இராஜினாமா செய்யவில்லை என்கிறார் ஜகத் அல்விஸ்!

பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஜகத் அல்விஸ் தனது இராஜினாமா கடிதத்தை நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்ததாக வெளியான செய்தியை அவர் நிராகரித்துள்ளார்.

தான் இதுவரையில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவியை இராஜினாமா செய்யவில்லை எனவும் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், பொதுமக்கள் பாதுகாப்பு துறைக்கு புதிய அமைச்சர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதால், அந்த அமைச்சிற்கு வேறு ஒரு செயலாளரை நியமிப்பதற்கான வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) வாக்குமூலம் பதிவு செய்த சில மணி நேரங்களிலேயே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவியில் இருந்து மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஜகத் அல்விஸ் இராஜினாமா செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *