23 அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்

கொழும்பு,மே 24

அமைச்சரவை அமைச்சுகளுக்கு புதிய செயலாளர்கள் 23 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி அவர்கள் செவ்வாய்க்கிழமை (24) பிற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடமிருந்து தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *