
அமைச்சரவை அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் இன்று நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு புதிதாக நியமிக்கப்பட்ட செயலாளர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் நியமன கடிதங்களை பெற்றுக்கொண்டுள்ளனர்.
இதற்கமைய ஆர் டபிள்யூ ஆர் பிரேமசிறி போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளராக பதவி பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார்.
அரச நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளராக எம். பீ .கே மாயாதுன்னே நியமிக்கப்பட்டுள்ளார்.
துறைமுகம் மற்றும் கப்பல் துறை அமைச்சின் செயலாளராக கே. டீ. எஸ் ருவண்சந்திர நியமிக்கப்பட்டுள்ளார்.
வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக எஸ். டீ கொடிக்கார நியமிக்கப்பட்டுள்ளார்.
நீதிமன்ற சிறைச்சாலைகள் நடவடிக்கைள் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளராக வசந்தா பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக எஸ். ஹெட்டியாராச்சி நியமிக்கப்பட்டுள்ளார்.
கல்வி அமைச்சின் செயலாளராக எம். என் ரணதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
வலுசக்தி மற்றும் வலு சக்தி அமைச்சின் செயலாளராக எம்.பி.டீ.யு. கே மாப்பா பத்திரண நியமிக்கப்பட்டுள்ளார்.
நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சின் செயலாளராக மொண்டி ரணதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
கடற்றொழில் அமைச்சின் செயலாளராக ஆர்.எம்.ஐ ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
நீர்பான அமைச்சின் செயலாளராக யு.டி.சி ஜயலால் நியமிக்கப்பட்டுள்ளார்.
விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளராக அநுராத விஜயகோன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சுற்றாடல் அமைச்சின் செயலாளராக மருத்துவர் அனில் ஜசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
ஊடகத்துறை அமைச்சின் செயலாளராக அனுஷ பெல்பிட்ட நியமிக்கப்பட்டுள்ளார்.
புத்தசாசன , சமய, மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளராக சோமரத்ன விதான பத்திரன நியமிக்கப்பட்டுள்ளார்.
வெளிநாட்டு அலுவலகள் அமைச்சின் செயலாளராக அருணி விஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
சுகாதார அமைச்சின் செயலாளராக எஸ்.ஜே.எஸ் சந்திரகுப்த நியமிக்கப்பட்டுள்ளார்.

