டி.ராஜேந்தர் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதி

சென்னை,மே 24

நடிகரும், இயக்குனருமாக டி. ராஜேந்தர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 19ம் தேதி மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்.

இப்பொழுது நடிகர் சிலம்பரசன் டி. ராஜேந்தர் உடல்நிலை குறித்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ரசிகர்களுக்கும் ஊடக பத்திரிக்கை நண்பர்களுக்கும் வணக்கம் என ஆரம்பிக்கும் அந்த அறிக்கையில் தனது தந்தைக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம் என்ற தகவலை உறுதிப்படுத்தி இருக்கிறார்.

மேலும் அங்கு பரிசோதித்ததில் அவருக்கு வயிற்றில் இரத்த கசிவு ஏற்பட்டிருப்பதால் அவருக்கு உயர் சிகிச்சை கொடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளதாகவும் அதில் தெரிவித்து இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *