அமெரிக்காவிலிருந்து ரணிலுக்கு வந்த அழைப்பு!

அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி முகவரமைப்பின் நிர்வாகி சமந்தா பவர் (Samantha Power), நேற்றையதினம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை தொலைபேசியில் அழைத்து உரையாடியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த உரையாடலின்போது அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி முகவரமைப்பு, இலங்கை மக்களுக்கு ஆதரவளிப்பதாக சமந்தா பவர் உறுதியளித்துள்ளார்.

இலங்கையில் இந்த மாதம் அரசியல் பிரச்சினைகளால் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்கள் மற்றும் காயமடைந்த இலங்கையர்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்துக்கொண்ட சமந்தா பவர், அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி முகவரைமைப்பு, இலங்கை மக்களுக்கு தனது ஆதரவை அளிக்கத் தயாராக இருப்பதாகவும், பிரச்சினைகளை தீர்க்க உதவியளிப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *