இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் மற்றும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானிடம் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ 21ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூல வரைபை சமர்ப்பித்துள்ளார்.
புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் தமது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் சமர்ப்பிக்குமாறு நீதியமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.
21ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூல வரைவு தொடர்பான முன்மொழிவுகளை எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு முன்னர் கையளிக்குமாறு அமைச்சர் இ.தொ.காவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

