சோறுடன் மிளகாய் சாப்பிடுவதற்கு நாளொன்றுக்கு 500 ரூபா தேவை – வெளியானது ரிப்போட்

மூன்று பேரை உள்ளடக்கிய குடும்பம் ஒன்றில், நாளொன்றுக்கு சாப்பிடுவதற்கு 500 ரூபாய் தேவை என, இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

அரிசிச் சோறு, தேங்காய்த் துருவல், சுட்ட மிளகாயுடன் மூன்று வேளையும் சோறு சாப்பிடுவதற்காக சாதாரண குடும்பம் ஒன்று நாளொன்றுக்கு 500 ரூபாவை செலவிட வேண்டியுள்ளது.

அதன்படி அரிசி ஒன்றரை கிலோ – 330 ரூபா, தேங்காய் ஒன்று – 120 ரூபா, விறகு – 40 ரூபா,உப்பு, மிளகாய் – 10 ரூபா,மொத்தம் – 500 ரூபா என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *