
கொழும்பு,மே 24
படகு ஒன்றின் வாயிலாக இலங்கையை சேர்ந்த சிலர் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசித்ததாகக் கூறப்படும் விடயம் தொடர்பில் அவுஸ்திரேலிய பாதுகாப்பு பிரிவினாரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லிபரல் கட்சியினால் தேர்தலை மையமாக கொண்டு இவ்வாறு போலி பிரசாரம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அத்துடன் கடற்படையினரின் பாதுகாப்பு நடவடிக்கைகளை மீறி அவுஸ்திரேலியாவிற்குள் எவ்வாறு பிரிதொரு நாட்டு படகு பிரவேசித்திருக்க முடியும் என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
அவ்வாறான ஒரு சம்பவம் நடைபெற்றிருக்காவிட்டால் குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவது அவசியமாகும் என தொழிலாளர் கட்சி தெரிவித்துள்ளது.
நடைபெற்ற தேர்தலில் லிப்ரபல் கட்சி தோல்வியை சந்தித்ததுடன் தொழிலாளர் கட்சி வெற்றிப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும், லிப்ரல் கட்சியின் நிர்வாகத்தினை நம்ப வைப்பதற்காக தேர்தல் தினத்தன்று இவ்வாறு ஒரு போலி செய்தியை பரப்பியதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

