புத்தளத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உணவுகள் வழங்கிவைப்பு

புத்தளத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு புத்தளம் நகர சபையின் ஏற்பாட்டில் சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

புத்தளம் நகர பிதா எம்.எஸ்.எம்.ரபீக்கின் மேற்பார்வையில் உத்தியேகத்தர்கள் மற்றும் ஊழியர்களின் ஒத்துழைப்பில் பகல் மற்றும் இரவு நேரங்களில் மேற்படி சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று காலை முதல் நண்பகல் வரை இடியுடன் பெய்த கடும் மழை காரணமாக புத்தளம் நகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் பல வீடுகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், புத்தளம் நகர பிதா எம்.எஸ்.எம்.ரபீக்கின் மேற்பார்வையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சமைத்த உணவுகள், குடிநீர் என்பன வழங்கப்பட்டு வருவதுடன், வெள்ளநீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *