தந்தையின் மாலைதீவு பயணம்: மறுக்கிறார் நாமல்

கொழும்பு,மே 24

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ மாலைதீவுக்குச் செல்லவிருப்பதாகவும்  அவருக்காக மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய சபாநாயகருமான மொஹமட் நஷீட் பாதுகாப்பான தங்குமிடமொன்றைத் தயார் செய்து வைத்திருப்பதாகவும் மாலைதீவைத் தளமாகக் கொண்டியங்கும் ‘த மோல்டீவ்ஸ் ஜேர்னல்’ என்ற செய்தி ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது.

அது குறித்து தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தின் ஊடாகக் கருத்து வெளியிட்டுள்ள இருவரும் மேற்கண்டவாறு மறுப்புத் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இது தொடர்பில் முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்க்ஷ அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவில் கூறியிருப்பதாவது,

நாட்டைவிட்டுச் செல்லும் நோக்கம் எனது தந்தைக்கு இல்லை. எனவே, அவர் மாலைதீவுக்குச் செல்லப் போவதாகவும், அங்கு வீடு ஒன்றை வாங்கப் போவதாகவும் வெளியான செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *