1708 பேர் கைது: 900 பேருக்குப் பிணை

காலிமுகத்திடல், அலரி மாளிகைக்கு முன்னால் நடந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 1708 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.

இவர்களில் 757 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு இருக்கும் அதேநேரம் 900 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.

நாடெங்கும் நடந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக சந்தேக நபர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *