தட்டுப்பாடு நிலவும் மருந்து தொடர்பில் அறிக்கையை சமர்ப்பிக்க ஆலோசனை: ரணில்

கொழும்பு,மே 25

நாட்டில் அத்தியாவசிய மருந்து வகைகள் மற்றும் தட்டுப்பாடு நிலவும் மருந்துகள் தொடர்பில் துரிதமாக அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியின் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாட்டினால் குறுதியகால, மத்தியகால தீர்வுகளைக் காண்பது தொடர்பான கலந்துரையாடல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று புதன்கிழமை இடம்பெற்றது.

இதன் போதே அவர் இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.

மேலும் இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் இலங்கைக்கு கிடைக்கப் பெற்றுள்ள 200 மில்லியன் டொலர் பெறுமதியான மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு டொலர் இன்மையின் காரணமாக, இரு நாடுகளுக்குமிடையிலான பேச்சுவார்த்தைகளின் பின்னர் இலங்கை ரூபாவில் அதற்கான கொடுப்பனவை செலுத்துவதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதன் போது தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *