மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி 282 ஓட்டங்கள்

கொழும்பு,மே 25

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவடைந்துள்ளது.

இதன்படி, தமது முதல் இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி இன்றைய ஆட்டநேர முடிவில் 05 விக்கெட்டுக்களை இழந்து 282 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இலங்கை அணியின் திமுத் கருணாரத்ன 80 ஓட்டங்களுடனும், ஓசத பெர்னாண்டோ 57 ஓட்டங்களுடனும், தனஞ்சய டி சில்வா 58 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்துள்ளனர்.

அஞ்சலோ மெத்யூஸ் 58 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

பந்துவீச்சில் பங்களாதேஷ் அணியின் ஷகிப் அல் ஹசன் 59 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.

தமது முதல் இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 365 ஓட்டங்களை பெற்றிருந்தது.

பங்களாதேஷ் அணி சார்பில் முஷ்பிகர் ரஹீம் 175 ஓட்டங்களையும், லிட்டன் தாஸ் 141 ஓட்டங்களையும் பெற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *