மீண்டும் இலங்கைக்கு திரும்பிய யோசிதராஜபக்சவும் அவரது மனைவியும்

கொழும்பு,மே 25

மே 9 ம் திகதி இலங்கையிலிருந்து வெளியேறிய யோசிதராஜபக்சவும் அவரது மனைவியும் செவ்வாய்க்கிழமை மீண்டும் இலங்கை திரும்பியுள்ளனர்.

சிங்கப்பூரிலிருந்து அவர்கள் இலங்கை வந்தனர் என விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

யோசித ராஜபக்ஷ நிதீசஜயசேகர இருவரும் இரவு வர்த்தகரீதியில் முக்கியமான நபர்களிற்கான பகுதி ஊடாக விமானநிலையத்திற்குள் நுழைந்துள்ளனர்.

அவர்கள் கறுப்பு உடையணிந்திருந்தனர் அவர்களை பலர் விமான நிலையத்திற்கு வெளியே சந்தித்து வாகனத்தில் ஏற்றிச்சென்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

யோசித ராஜபக்ஷ மே 9 ம் திகதி திங்கட்கிழமை காலை இலங்கையிலிருந்து புறப்பட்டுச்சென்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *