தம்பராவ குளத்தில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் சாவு

மஹியங்கனை – தம்பராவ குளத்தில் குளித்துக் கொண்டிருந்த 45 வயதுடைய ஒருவரும் இரண்டு மகன்களும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

பல மணிநேரம் ஆகியும் மூவரும் வீடு திரும்பாததால் நேற்று மாலை பிரதேசவாசிகள் அந்த இடத்தை ஆய்வு செய்த போது நீரில் மூழ்கி உயிரிழந்த மூவரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர்கள் 45 வயதுடைய ஒருவரும் அவரது 10 மற்றும் 15 வயதுடைய மகன்களும் ஆவார்கள்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் மஹியங்கனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *