ஹிஷாலினி என்ற 16 வயதான சிறுமி மரணித்தமை தொடர்பில் கைதான முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட 3 பேர் நாளை வரை பொரளை காவல்துறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இதனை காவல்துறை பேச்சாளர் சிரேஸ்ட பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் 42 வயதான மனைவி, மனைவியின் 70 வயதுடைய தந்தை மற்றும் சிறுமியை பணிக்கு அமர்த்திய தரகர் ஆகியோரே இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
Advertisement
அத்தோடு சிறுமி ஹிஷாலினி மரணம் தொடர்பில், இதுவரை 20 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ள அதேவேளை தற்போது இரண்டு காவல்துறை குழுக்கள் விசாரணைகளை மேற்கொள்கின்றன.
மேலும் இதுவரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் தொடர்பில் திருப்தி கொள்ள முடியாதுள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. அத்தோடு அந்த அதிகார சபையின் தலைவர் முதித விதானபத்திரன இதனை தெரிவித்துள்ளார்.